கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, தெய்வத்திருமகனார் திரு முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு விஜயகுமார் அவர்களின் தலைமையில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் எம். என். கந்தசாமி, ஏ.ஐ.சி.சி உறுப்பினர் வி. எம். சி. மனோகரன், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரிப், மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் பழையூர் செல்வராஜ், ஐ.என்.டி.யூ.சி தலைவர் கோவை செல்வன், மாமன்ற உறுப்பினர் காயத்ரி, ஷோபனா செல்வம், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீநிதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மாவட்ட துணைத் தலைவர்கள், மாநில சிறுபான்மை ஒருங்கிணைப்பாளர், பொதுச்செயலாளர்கள், சர்க்கிள் தலைவர்கள், வட்டார் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த விழா, தேவர் அவர்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் தன்னலமற்ற பணியை நினைவுகூரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.



Leave a Reply