ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.30) பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் கூடிச் சாமி வழிபாடு, மாலை மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) பசும்பொன் நினைவிடத்திற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், முத்துராமலிங்க தேவருக்கு 13 அரை கிலோ தங்கத்தால் ஆன கவசம் அணிவித்து பெருமைப்படுத்தினார். நந்தனத்திலும் தேவரின் திருவுருவச் சிலை அமைத்து மரியாதை செய்தார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சரிடம் அளித்துள்ளோம்,”
என தெரிவித்தார்.
மேலும், “ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே வாகனத்தில் பசும்பொன் நோக்கி வருகிறார்களா?” என்ற செய்தியாளர் கேள்விக்கு,
“அது குறித்து எனக்கு தெரியவில்லை; வந்தால் தான் தெரியும், அப்போதுதான் கருத்து சொல்கிறேன்,”
என்று அவர் கூறினார்.
பசும்பொனில் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.



Leave a Reply