அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு உத்தரவிட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1992ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா கடைசியாக அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதன் பின்னர், அணு ஆயுத ஒப்பந்தங்களும் சர்வதேச அழுத்தங்களும் காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, வெளிநாட்டு உறவுகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீனாவுடன் பொருளாதார ரீதியான மோதல்களை உருவாக்கியதுடன், சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில், டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே, அமெரிக்க ராணுவத்திடம் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தெரிவித்துள்ளார்:
“அமெரிக்கா உலகில் மிக அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளது. எனது முதல் ஆட்சிக் காலத்தில் நாங்கள் அவற்றை புதுப்பித்தோம். தற்போது ரஷ்யா இரண்டாமிடத்தில், சீனா மூன்றாமிடத்தில் உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவுடன் சம அளவில் ஆயுதங்கள் இருக்கும். மற்ற நாடுகள் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ள நிலையில், நாங்களும் நமது பாதுகாப்புக்காக சோதனைகளை மீண்டும் தொடங்குகிறோம். ‘Department of War’ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், டிரம்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Leave a Reply