நடப்பாண்டுக்கான ஹென்லே சிறந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது. உலகின் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் சிங்கப்பூர்காரர்கள் செல்ல முடியும்.இரண்டாவது இடத்தில் தென்கொரியாவும் மூன்றாவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. இந்தியா 2024ம் ஆண்டு 80வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 85வது இடத்துக்கு பின்தங்கியது. இதனால், இந்தியர்கள் விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணிக்கலாம். உலகின் மிகவும் வீக்கான பாஸ்போர்ட்களையும் ஹென்லே அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாடு பட்டியலில் கடைசி இடத்தில் (104) இருக்கிறது. பல ஆண்டு காலமாக நடக்கும் உள்நாட்டு போர், அரசியல் நிலையற்றத் தன்மை, தீவிரவாதம் போன்ற காரணிகளால் இந்த நாடு கடைசி இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானியர்கள் உலகின் எந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் விசா கண்டிப்பாக எடுக்க வேண்டும். இதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு படிக்க கூட செல்ல முடியாத நிலை ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு உள்ளது.
பட்டியலில் 103வது இடத்தில் சிரியா பாஸ்போர்ட் உள்ளது. பல ஆண்டு காலம் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக சிரிய மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கடுமையான தடைகளை தாண்ட வேண்டியது இருக்கிறது. 102வது இடத்தில் ஈராக் நாடு உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மையும், உள்நாட்டு போரும் இதற்கு காரணம். இந்த பட்டியலில் பாகிஸ்தான் 101வது இடத்தில் இருக்கிறது. அரசியல் பதற்றங்கள், இந்தியாவுடன் எல்லைத் தகராறு. உள்நாட்டு பாதுகாப்பு சவால்கள் காரணமாக பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கும் மதிப்பு குறைவாகவே உள்ளது. இதனால், பாகிஸ்தானியர்களும் எந்த நாட்டுக்கு சென்றாலும் விசா எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏமன் நாடும் 101வது இடத்தில் உள்ளது. உள்நாட்டு போர் காரணமாக ஏமனிய மக்களுக்கு பெரும்பாலான வெளிநாடுகள் விசா வழங்குவதில்லை.
100வது இடத்திலுள்ள சோமாலியா பாஸ்போர்ட்டுக்கும் இதே நிலைதான். 99வது இடத்தில் நேபாள நாடு உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை இங்கு இல்லாததால், நேபாள பாஸ்போர்ட்டுக்கும் மதிப்பு குறைவுதான். 99வது இடத்தில் பாலஸ்தீன பாஸ்போர்ட் உள்ளது. இஸ்ரேலுடன் மோதல், உலகின் பல நாடுகளின் அங்கீகாரம் கிடைக்காதது போன்றவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் லிபியாவில் நடந்து வருகிறது. இதனால், 98வது இடத்திலுள்ள லிபியா பாஸ்போர்ட்டுக்கு மதிப்பு குறைவு. இந்த நாடு உலகின் வீக்கான பாஸ்போர்ட் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.98வது இடத்திலுள்ள வட கொரிய நாட்டுக்கு இந்த பட்டியலில் 10வது இடம். உலகில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடு இது. இந்த நாட்டு அரசே தங்கள் நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது



Leave a Reply