கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அடுக்குமாடி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என, அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுணன் இன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கோவை வடக்கு வட்டாட்சியரிடம் பெறப்பட்ட தகவலைத் தெரிவித்தார். வீரகேரளம், வடவள்ளி, சங்கனூர், தெலுங்குபாளையம், கணபதி கிழக்கு மற்றும் கணபதி மேற்கு போன்ற தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில், தொழிற்பேட்டை அமைக்க தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
இதையடுத்து, தற்போது கோவை வடக்கு தொகுதியில் அடுக்குமாடி தொழிற்பேட்டை அமைப்பதற்கான எந்தத் திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.



Leave a Reply