வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடித்து வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை கடந்து நகரும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதனுடன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையில்லாமல் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.



Leave a Reply