கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா தற்காலிகமாக நிறுத்தம்

Spread the love

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று புதன்கிழமை (22.10.2025) முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத் துறை அறிவித்துள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டு, அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.