சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதல்வரும் பங்கேற்று, பொதுமக்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் கண்காணிப்பு, மீட்பு பணிகளுக்கான தயார்நிலை, முகாம்கள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதற்கான அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், “இயற்கை விடுக்கும் சவால்களை விழிப்புணர்வோடு எதிர்கொள்வோம், பாதுகாப்பை உறுதி செய்வோம்!” என தெரிவித்துள்ளார்.



Leave a Reply