அன்பை சொல்ல அழகான வழி; மைசூர்பாக்கை வீழ்த்திய கோவை மைசூர்பா

Spread the love

முதன்முதலாக மைசூர்பாக் எப்போது எவ்வாறு உருவானது? எங்கே உருவானது என்பது பெயரிலேயே புரிந்திருக்கும். கண்டிப்பாக மைசூர் ரசம், மைசர் போண்டா போல மைசூரிலிருந்து தான் மைசூர் பாக்கு வந்திருக்கும் என்று. மைசூர் சரி, அது என்ன பாக்கு? கொஞ்சம் யோசனைக்குப் பிறகு பாகு என்பதுதான் உருமாறி பாக், பாக்கு என்று மாறியிருக்கிறது என்று புரிகிறது.

இப்போது மைசூர் பாக் தோன்றிய கதையைப் பார்ப்போம். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் மகாராஜா அரண்மனையின் கீழ் அமைந்த கோவில்களுக்கு பிரசாதமாக அரண்மனை சமையற்கூடம் சார்பாக தினமும் ஒரு இனிப்பு வழங்கப்படுவதுண்டு. ஒருநாள் தலைமை சமையல்காரர் நேரமாகிவிட்டதால் ஒப்பேற்றலுக்கு திடீரென்று செய்த ஒரு விஷயம் தான் இந்த மைசூர் பாக். இந்த திடீர் இனிப்பு மகாராஜா கிருஷ்ண ராஜா உடையாருக்கு இது மிகவும் பிடித்துப்போகவே தலைமை சமையல்காரரை கூப்பிட்டு இது என்ன இனிப்பு என்று கேட்க அப்போது தன் மனதில் தோன்றிய மைசூர் பாக்கு என்று சொல்லி சமாளித்தார். இப்படியாக அன்று முதல் இது தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா முழுவதிலும் பந்திகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய இனிப்பு பண்டமாக மாறியது.

ஆனால், இந்த மைசூர்பாக்குவை உலகளவில் கொண்டு சேர்த்தது நமது கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்தான். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மைசூர்பாக்குகள் கொஞ்சம் அதிகமாகவே நெய் விட்டு செய்யப்படும் .இது, மிருதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுதான் நெய் மைசூர் பாக்கு என்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறிமுகப்படுத்திய மைசூர்பா எனவும் பெயர் பெற்றது. இந்த மைசூர்பா ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் டாக்டர். எம்.கிருஷ்ணனின் பிரைய்ன் சைல்ட் என்றால் மிகையல்ல. இந்த மைசூர்பாவில் சற்று நெய் தூக்கலாகவே இருக்கும். எல்லோருக்கும் இது மிகவும் பிடித்திருந்ததால் பண்டிகைகளில், குறிப்பாக தீபாவளியை ஆக்கிரமித்தது. எல்லா இனிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி ‘ஸ்வீட் எடு, கொண்டாடு’ என்றாலே அது ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பாதான். இதன் விளைவாக ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விற்பனை எகிறி கூடுதல் தேவையை சமாளிக்க வேண்டி ஏரியாவுக்கு ஒரு கிளை என்ற ரேஞ்சில் விரிவாக்கம் ஆனது. இப்போது ,’அன்பை சொல்ல அழகான வழி’ என்ற ஸ்லோகனுடன் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

வரத்தகத்தில் மட்டுமல்ல, சமூகத்துக்கும் ஸ்ரீகிருஷ்ண ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் அளப்பரிய பங்களிப்பை செய்து வருகிறார். புத்தாண்டை ஆன்ம ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருள் நிறைந்த ஆன்மீக உற்சவத்தை நடத்துகிறது. வருடம் தோறும் நிகழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போவருவாரோ என்ற ஆன்மீக உற்சவம் , கோவையில் வெகு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.