தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், கிட்னி திருட்டு முறைகேடு வழக்கு அவையின் மையத்தில் நின்றது.
திமுக அரசு உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி அதிமுக கடுமையாக விமர்சித்தது. இந்தப் பிரச்சினை, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி (ஈபிஎஸ்) உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்தனர்.
கிட்னி திருட்டு வழக்கில் அரசின் அலட்சியத்தை கண்டிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. “அரசு விசாரணையை விரைவுபடுத்தாமல், பாதிக்கப்பட்டோரை புறக்கணிக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது” என்று ஈபிஎஸ் வெளியே செய்தியாளர்களிடம் ஏற்கனவே, தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில், நேற்று 2-ஆம் நாளில் சட்டப்பேரவை கூடிய நிலையில், கரூர் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சி தரப்பு பல கேள்விகளை எழுப்பியிருந்தது.
இன்று கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்தது வந்தனர்.



Leave a Reply