திருச்சியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் துவக்கம்

Spread the love

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரம்பா -ஊர்வசி தியேட்டர் அருகில் என்ற முகவரியில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டது. திருச்சி, ரம்பா – ஊர்வசி தியேட்டர், நிறுவனர் என். மாணிக்கம் ஷோரூமை திறந்து வைத்தார். திருச்சி எக்ஸ்னோரா துணை தலைவர் கலாவதி சண்முகம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாநில பொதுச் செயலாளர், வி.இ. கோவிந்தராஜுலு முதல் விற்பனையைப் தொடங்கி வைத்தார். திருச்சி ஜூவல்லரி அசோசியேஷன், ஏபிஏ ஜூவல்லரி தலைவர், ஆர்.விஜயராகவன் , முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றார். திருப்பூர் ஹீரோ ஃபேஷன் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார்.