தீபாவளி விடுமுறை காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்த 10 ஆம்னி நிறுவனங்கள் கட்டணத்தை குறிக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இந்த ஆண்டும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
போக்குவரத்துத் துறை, கூடுதல் கட்டணத்திற்கு புகார் தெரிவிக்க தொலைப்பேசி, வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வசதிகளை வழங்கியுள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து போக்குவரத்து ஆணையர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தீபாவளி சிறப்பு பேருந்து பயணிகள் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக துறை தெரிவித்துள்ளது.



Leave a Reply