தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் “தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம்” சார்பில், இரத்த தானத்தில் சிறந்த பங்களிப்பு செய்த இயக்கங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில், கோவையில் அதிக இரத்த தானங்களை ஒருங்கிணைத்து சாதனை படைத்த “தளபதி இரத்ததான இயக்கம்” ஒருங்கிணைப்பாளர், திமுக தீர்மானக்குழு செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் அவர்கள் சிறப்பு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார்.
இந்நிகழ்ச்சிக்காக மாநில முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நா. கார்த்திக் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மக்களின் உயிர் காப்பதில் இரத்த தானம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என வலியுறுத்திய முதலமைச்சர், தளபதி இரத்ததான இயக்கம் சமூக நலத்திற்கான சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Leave a Reply