ராமதாசுக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன் – அன்புமணி காட்டம்

Spread the love

சென்னை பனையூரில் பாமகவில் தந்தை–மகன் மோதலுக்கு மத்தியில், அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமகவ் நிறுவனர் ராமதாசை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாக விமர்சித்தார். மேலும், ராமதாஸ் ஓய்வெடுக்க விடாமல் பலர் தொந்தரவு செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

அன்புமணி குறிப்பிட்டதாவது:
“மருத்துவர் ராமதாஸ் நன்றாக இருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்கிறார். அவர் செக் அப் சென்றதை என்னிடம் சொல்லி, ‘ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள்’ என்று கூறுகின்றனர். இது அசிங்கமா இருக்கிறது. யார் யாரோ வந்து பார்க்கிறார்கள். ராமதாஸ் என்ன எக்ஸிபிஷனா? இது ராமதாஸின் உயிர். அவரை தூங்கவிடுவதில்லை. அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன். அவரை வைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.”

அன்புமணி இதன் மூலம் ராமதாசின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் எச்சரிக்கை விடுத்து, அரசியல் நாடகங்களில் அவர் பயன்படுத்தப்படுவதை கடுமையாக கண்டித்து உள்ளார்.