“திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Spread the love

அரசுப் பள்ளிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெறுவதால் மாணவர்களின் வகுப்புகள் தடைப்படும் நிலை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன், “ஒரு நாளில் வகுப்பு நடக்கவில்லை என்றால் பெரிய பிரச்சனை இல்லை” என்று கூறியதற்கு எதிராக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில், “திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி” என விமர்சித்துள்ளார்.

அவர் மேலும், “அரசுப் பள்ளி வகுப்பறைகள் பறிக்கப்பட்டு மாணவர்கள் வெயிலில் அமர வைக்கப்படுவது கல்வியையும் ஆசிரியர்களின் திறமையையும் அவமதிப்பதாகும். திமுக அமைச்சரின் ஆணவப் பேச்சு கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.