உலக சேவை தினத்தை முன்னிட்டு கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் அவர்கள் தலைமையிலும், சங்கத் தலைவர் லயன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி கோவை ராமானுஜம் நகர் பங்காருலே அவுட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அஷ்டகால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்றது.
விழாவை சுற்றுப்புற சூழல் மாவட்ட தலைவர் இன்ஜினியர் ராஜ்குமார் அவர்கள் மரங்களை நட்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கொரியர் நடராஜ், கோவிந்தராஜ், கிரீஸ், தீபக் குமார் என்கிற கண்ணன், குமார், சின்ன தம்பி, ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகிழம், ஈட்டி, மூங்கில், கடம்பு, புரசை, மந்தாரை, நெல்லி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மரம் நடும் விழா அனைவராலும் பாராட்டப்பட்டது.



Leave a Reply