இதய சிகிச்சைத் துறையில் முன்னோடியான ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம் மருத்துவமனை), இதய அறுவைச் சிகிச்சைத் துறையில் தனது 50 ஆண்டுகால சிறப்பான சேவையை பெருமிதத்துடன் கொண் டாடியது. கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்ற சிறப்பு விழாவில் மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
1974 ஆம் ஆண்டு இதய அறுவைச் சிகிச்சைத் துறை தொடங்கப்பட் டதிலிருந்து தரம், புதுமை மற்றும் சிறப்புத் திறன் ஆகியவற்றில் மருத்துவமனை தொடர்ந்து அர்ப்ப ணிப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து தசாப்தங்களாக 45,000 க்கும் மேற்பட்ட இதய அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற் கொள்ளப ்பட்டுள்ளன. இதில் கரோனரி அறுவைச் சிகிச்சை, வால்வு பழுதுபார்ப்பு மற்றும் பெருநாடி அறுவைச் சிகிச்சைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
விழாவிற்கு தலை மை விருந்தினராக இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை தேசிய பயிற்சியாளரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான ஸ்ரீ புல்லேலா கோபிச்சந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முக்கிய விருந்தி னர்களாக பத்மஸ்ரீ டாக்டர் ராமநாதன் வி. ரமணி (சங்கரா கண் மருத்துவ அறக்கட்டளை நிறுவனர்), டாக்டர் ஜெயராம் வரதராஜ் (எல்கி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர்) மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் ரவி கண்ணன் (காசார் புற்றுநோய் மருத்துவமனை, அஸ்ஸாம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமையேற்றார். விழா நிகழ்ச்சியில் இதயநோய் நிபுணர்கள், மயக்கமருந்து நிபுணர்கள் மற்றும் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், அவர்களின் நீண்டகால பங்களிப்புக்காக சிற ப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
இதய அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவர் மற்றும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை இயக்குநர் டாக்டர் பி. சந்திரசேகர், “கடந்த ஐந்து தசாப்தங்களாக எங்கள் துறை 45,000 க்கும் மேற்பட்ட இதய அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை முழுமையான மருத்துவ தீர்வுகளை வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் 1,800 க்கும் மேற்பட்ட திறந்த இதய அறுவைச் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வருவது எங்கள் பெருமை,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும், “இந்த மைல்கல் வெறும் எண்ணிக்கையின் கொண்டாட்டம் அல்ல; இது காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும், நம்பிக்கை பெற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும், குணமடைந்த ஒவ்வொரு இதயத்திற்கும் நன்றி செலுத்தும் விழா,” என்றார்.
இந்த நிகழ்வின் மூலம் ஜி.கே.என்.எம் மருத்துவமனை தனது அரை நூற்றாண்டு சிறப்பை சிகிச்சைத் துறையில் மீண்டும் நிரூபித்தது.
ஜி.கே.என்.எம் மருத்துவமனை இதய அறுவைச் சிகிச்சைத் துறையின் 50 ஆண்டுகள் சாதனை



Leave a Reply