சர்வதேச 2 சதவீதம் விஞ்ஞானிகள் பட்டியல் பி. எஸ். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் பிரிவு துணை பேராசிரியர் ஆ. யுவராஜ் இடம்பெற்று சாதனை

Spread the love

சர்வதேச அளவில் 2 சதவீத விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில் பி. எஸ். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்சீவர் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் நிறுவனம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளாக சர்வதேச அளவில் தலைசிறந்த 2 சதவீதம் விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கடந்த 1788-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் ‘வாழ்நாள் விஞ்ஞானிகள்’ என்ற தலைப்பிலும், ஓராண்டுக்கான விஞ்ஞானிகள்’ என்ற தலைப்பிலும் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான விஞ்ஞானிகள் பட்டியலை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சீவர் நிறுவனம் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
அந்தப் பட்டியலில் 22 அறிவியல் துறைகள், 174 துணைத் துறைகளின் கீழ் 2.3 லட்சத்துக்கும் அதிகமான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வாழ்நாள் விஞ்ஞானிகள் 3,372 பேரும், ஓராண்டுக்கான விஞ்ஞானிகள் (2024) பட்டியலில் 6,239 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் பிரிவு துணை பேராசிரியர் ஆ. யுவராஜ்  இடம் பெற்றுள்ளார். உலகளவிலான 2 சதவீதம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை பேராசிரியரை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர், முதல்வர், அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.