வேலூரில் பதற்றம்: தவெக தலைவர் விஜய்க்கு எதிராக சுவரொட்டி – திமுக நிர்வாகிகள், தவெக தொண்டர்கள் இடையே கைகலப்பு

Spread the love

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே பங்களா மேடு பகுதியில் பதற்றம் நிலவியது.

கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் “மாணவர் சங்கம்” என்ற பெயரில் விஜய்க்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, பங்களா மேடு பகுதியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் இப்படிப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தவெக நிர்வாகிகள் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை தீவிரமடைந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.