ராயல் கேர் மருத்துவமனை மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில் செயற்கரிய செயல் தவமா? தானமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். க. மாதேஸ்வரன் முன்னிலையில் பட்டி மன்றம் நடைபெற்றது
சொல்வேந்தர் சுகிசிவம் பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
இதில் தவமே என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் புலவர்.மா.இரா மலிங்கம், நகைச்சுவை நம்பி ச.நீலகண்டன், சிந்தனைச் செல்வன் ஆ. பிரிட்டோ ஆகியோர் பேசினர்.
தானமே என்ற தலைப்பில் சொல்லரசி பர்வீன் சுல்தானா, செந்தமிழ்ச்செல்வி கோவை சாந்தாமணி, தமிழ்ச்சுடர் க. சிவகுரு நாதன் ஆகியோர் பேசினர்.
உடல் உறுப்பு தானம், அறுவை சிகிச்சை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டிமன்றம் அமைந்தது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராயல்கேர் மருத்துவமனை சார்பில் பட்டிமன்றம்



Leave a Reply