என் ஆழ்ந்த அனுதாபங்கள் – நடிகர் ரஜினிகாந்த்

Spread the love

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அதிர்ச்சியாக, பலியானவர்களில் குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயரச் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்,” என்று அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.