மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை – தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

Spread the love
கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.பிரசாந்த், கைத்தறித்துறை உதவி இயக்குநர் அ.வே.கார்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸின் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி, துணை மண்டல மேலாளர் எஸ்.லட்சுமி பிரபா, முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) கோ.ஜெகநாதன், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் என்.செல்வதுரை, மேலாளர் .எஸ்.விஜயானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.