தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை – டெல்லி சென்றார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Spread the love

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேற்று சந்தித்த நயினார் நாகேந்திரன், இன்று டெல்லி புறப்பட்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, அக்டோபரில் தொடங்க உள்ள தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அக்டோபர் 11 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் நயினார் நாகேந்திரன். தினமும் மூன்று தொகுதிகள் வீதம், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்