பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுகவினர் பெருவிழா கொண்டாடினர்.
கோவை மாநகர வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ச்சுணன் தலைமையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மலர்மாலை அணிவித்து வணங்கினர்.
இதையடுத்து, “தீயசக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அயராது பாடுபடுவோம்” என்று தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சி.டி.சி.ஜப்பார், செய்தித் தொடர்பாளர் மகேஸ்வரி, இலக்கிய அணி மாநில துணை செயலாளர் புரட்சிதம்பி, மாமன்ற குழு தலைவர் ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதயதெய்வம் மாளிகையில் கட்சியின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, அண்ணா சிலைக்கு மலர்தூவியதும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதும் சிறப்பம்சமாக அமைந்தது.



Leave a Reply