உறவினர் திருமணத்தில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இ.பி.எஸ்-க்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு குறித்து கேட்டபோது, “எல்லாம் நன்மைக்கே” என்று அவர் கூறினார்.
ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தன்னை சந்தித்து வருவது குறித்து, “இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் இணைய வேண்டும், அம்மா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும் என்பதே என் ஆசை” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் எப்போது ஒன்றிணைவு ஏற்படும் என்ற கேள்விக்கு, “ஒரு மாதத்திற்குள் நடைபெறும்” என நம்பிக்கை வெளியிட்டார்.



Leave a Reply