ஆதார் அட்டையை யூ.பி.ஏ. அரசு அறிமுகப்படுத்தியது – கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

Spread the love

கோவை விமான நிலையம் வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஜனநாயக முறையில் INDIA Bloc வேட்பாளருக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுகின்றன. மக்கள் உணர்வுடன் வாக்களிப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது. NDA வேட்பாளருக்கு எதிராக ஒருங்கிணைந்த வாக்காக அமையும்” என்று தெரிவித்தார்.

மேலும், சுப்ரீம் கோர்ட் ஆதார் அட்டையை 13வது அடையாள ஆவணமாக இணைத்தது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “ஆதார் அட்டை ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். அதை யூ.பி.ஏ. அரசு அறிமுகப்படுத்தியது. இது காங்கிரஸ் மற்றும் யூ.பி.ஏ.வின் மக்களுக்கு அளித்த பெரும் பங்களிப்பு” என்று கூறினார்.