ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Spread the love

கோவை வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை, எல்ஜி குழுமத்தின் பன்முகப் படுத்தப்பட்ட உற்பத்தி பிரிவான எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது..
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எல்ஜி அல்ட்ரா லிமிடெட் நிறுவனத்தினை பார்வையிடுவது, நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொழில்நுட்ப கட்டு ரைகள் சமர்ப்பிப்பது, மாண வர்களுக்கு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் குறித்தான ஆலோசனை வழங்குவது, ,தொழிற் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் கல்லூரி ஆசிரியர்கள் இந்நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது ஆகி யவை அடங்கும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் எல்ஜி அல்ட்ரா லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள துறைத்தலைவர் செந்தி ல்குமார் ராமசாமி ஆகியோர் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழு த்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர். டி. கோபாலகிருஷ்ணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் பி. மோகன்குமார், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் வி. நி ரஞ்சனாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.