இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த நாளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பேரணிகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, கோவை கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற மீலாது நபி ஊர்வலத்தில், “சமூக ஒற்றுமையை காப்போம்”, “சகோதரத்துவத்தை போற்றுவோம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திய சிறுவர்கள், சிறுமியர்கள் ஆர்வமுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு, காங்கிரஸ் மனித உரிமை பிரிவு சார்ந்தோர் பிஸ்கட், குளிர்பானம், இனிப்புகள் வழங்கினர்.
மேலும், மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், பிற மதங்களைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து, சமூக நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மீலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்போருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.



Leave a Reply