கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இண்டியா காங்கிளேவ் 2025-இன் நான்காவது பதிப்பில், எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சார்பில் “இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் 2025” வழங்கப்பட்டன. இவ்விழாவில், இளம் தலைமுறையை உருவாக்க தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், வரவேற்புரையில், “எதிர்காலம் என்பது காத்திருக்க வேண்டியதல்ல; நாமே மனச்சாட்சி, படைப்பாற்றல், கருணை ஆகியவற்றை இணைத்து உருவாக்க வேண்டியது தான். நாளைய இந்தியா செயற்கை நுண்ணறிவும் மனிதமும் இணைந்து கட்டியெழுப்பும் ஒன்றாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். ரோஹித் கபூர் உணவுவிநியோகத்தில் எதிர்கால மாற்றங்களை வலியுறுத்தினார். பிரகாஷ் பதுக்கோண், விளையாட்டின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மாற்ற முடியாது என்றார். சுரேஷ் நாராயணன், பிராண்டின் மதிப்பு மக்களின் மனதில் ஏற்படும் அனுபவத்தில்தான் உள்ளது என்று கூறினார். சஞ்சய் ஜெயின், ஆசிரியர்களை செயற்கை நுண்ணறிவு மாற்ற முடியாது, ஆனால் சிறந்த துணையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த இருபது சிறந்த ஆசிரியர்கள் தேசிய விருது பெற்றனர். கூடுதலாக, பதினான்கு ஆசிரியர்கள் எஸ்எஸ்விஎம் பிரிவு விருது பெற்றனர்.
“செயற்கை நுண்ணறிவும் மனிதமும் – நம் உலகை இணைந்து உருவாக்குவோம்” என்ற இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மனித மதிப்புகளுக்கும் இடையிலான சமநிலையின் அவசியத்தை வலியுறுத்தியது.
முன்னோக்கிய பார்வையுடன் கூடிய உரைகள், கலை நிகழ்ச்சிகள், உலகளாவிய அனுபவங்கள் மற்றும் விருது வழங்கலுடன், டிரான்ஸ்ஃபார்மிங் இண்டியா காங்கிளேவ் 2025 நிறைவுற்றது.
ஆசிரியர்களுக்கு இன்ஸ்பிரேஷனல் குரு விருது வழங்கி கௌரவித்த எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள்



Leave a Reply