மாணவர்களுக்கு ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் வழங்கி கௌரவித்த எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள்

Spread the love

எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள் நடத்தி வரும் இந்தியாவை மாற்றும் மாநாடு 2025–இன் நான்காவது நிகழ்வில், “ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025” வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் தொழில்முனைவு சிந்தனையை ஊக்குவித்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான திட்டங்களை பாராட்டுவதே இந்த விருதுகளின் பிரதான நோக்கம் ஆகும்.
இந்த விருதுகள், எஸ்எஸ்விஎம் நிறுவனங்களும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளும் இணைந்து பங்கேற்ற தைரியமான மாணவர்கள் தங்கள் யோசனைகளை சமூக நலனுக்குப் பயனளிக்கும் திட்டங்களாக மாற்றிய விதத்தை வெளிச்சமிட்டன. தொழில் நுட்ப நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், இம்மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் கல்வி இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் வரவேற்புரை வழங்கினார்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்கைப் பற்றி சிந்தனைத் தூண்டும் உரைகள் நடைபெற்றன. தொழில்முனைவோர் மற்றும் 1% கிளப் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஷரண் ஹெக்டே, எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், கல்வி இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ், கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் டாக்டர் ராஜா சபாபதி மற்றும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறை ஆய்வாளர் ஜிபு எலியாஸ் ஆகியோர்் உரையாற்றினர்.
நிகழ்வின் சிறப்புப் பகுதியாக, தேசிய அளவிலான “ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025” வெற்றியாளர்களுக்கு டாக்டர் மணிமேகலை மோகன், டாக்டர் ராஜா சபாபதி, ஸ்ரீஷா மோகன்தாஸ், நிதின் ஜெய் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
முதல் பரிசான ரூ.75,000யை சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியை சேர்ந்த  ரோனக் கோல்சா, அர்னவ் சராஃப், நைதிக் அகர்வாலா ஆகியோர் பெற்றனர். இரண்டாம் பரிசான ரூ.50,000யை ஸ்ரீ ரமண அகாடமி சீனியர் செக்கண்டரி சிபிஎஸ்இ பள்ளி மாணவர் தயா விஷ்ணு குமாரன் மற்றும்  மூன்றாம் பரிசான ரூ.25,000யை  பி.வி.எம். குளோபல் பள்ளியைச் சேர்ந்த  டி.எஸ். சர்வேஷ் ஆதித்யா, ஹெச். சிவ் சர்வேஷ், சஷ்வத் ஆர்.எஸ் ஆகியோர் பெற்றனர்.