நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை கோவையில் பலத்த பாதுகாப்பு

Leave a Reply