2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதேசமயம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டியிடும் முயற்சியில் செயல்பட்டு வருகின்றன.
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் இணைவார்கள் என்ற விவகாரம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கேப்டன் விஜயகாந்த் தனித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டார்; அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்பு தெரிவித்திருந்தேன். ஆனால் இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன்”
எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேமுதிக அரசியல் உத்திகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.



Leave a Reply