சர்வதேச உடல் உறுப்புதான வாரம், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கேஎம்சிஹெச் மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) இணைந்து, ‘வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கை 2025’ (‘Life After Life 2025’) என்ற கருத்தில் உறுப்பு தானம் செய்தவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தன்னலமற்ற பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பல சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிச்சாமி பேசுகையில் நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தியாகங்களை அங்கீகரிப்பதில் கேஎம்சிஹெச் பெருமை கொள்வதாகக் கூறினார். கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, அவர்கள் தனது உரையில் நன்கொடையாளர்களின் பங்களிப்பு நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்குப் புதிய வாழ்க்கையை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் TRANSTAN-இன் உறுப்பினர் செயலாளர் டாக்டர் N. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் Prof. Dr. R.கண்ணதாசன் மற்றும் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் C. மனோகரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உறுப்பு தானம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
முன்னதாக கேஎம்சிஹெச் ஹெல்த் சயின்சஸ் துறை இயக்குநர் டாக்டர் டி.பி. கலாநிதி வரவேற்புரை ஆற்றினார். சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். கந்தசாமி, மருத்துவமனையின் உடலுறுப்பு தானம் தொடர்பான புள்ளிவிவரங்களை வழங்கினர்.
கடந்த பல ஆண்டுகளாக மேற்கு தமிழ்நாட்டில் கல்லீரல், சிறுநீரகம், மற்றும் இருதய மாற்று சிகிச்சையில் கேஎம்சிஹெச் மிகப்பெரிய மையமாக விளங்குவதையும், உறுப்பு தானங்களுக்கு அதிக பங்களிப்பு செய்வதையும் அவர்கள் விளக்கினர். கேஎம்சிஹெச் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். யுவராஜ், 2022 முதல் 2025 வரையிலான நன்கொடையாளர்கள் குறித்த தகவல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் மற்றுமோர் சிறப்பம்சமாக, கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) கூட்டு முயற்சியாக, இறந்தவர்களின் உறுப்பு தானத்திற்கான மருத்துவ மாணவர் அமைப்பு (Students’ Charter of Deceased Organ Donation Programme) தொடங்கப்பட்டது. இதன்படி மாணவ தன்னார்வலர்களுக்கு பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படும். TRANSTAN-ன் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் மாணவர் அமைப்பின் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி விஜயராகவன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி முடிவில், நன்கொடையாளர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குநர் டாக்டர் A.N. முருகன் மற்றும்கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் (டாக்டர்) R. ரவிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



Leave a Reply