நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் பாரத் சேனா அமைப்பின் சார்பில் 101 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக சிவானந்த காலனியில் வெற்றி விநாயகர் சிலை நிறுவி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாரத் சேனா தலைவர் செந்தில் கண்ணன், எஸ்.ஆர். குமரேசன், ஸ்டோன் சரவணன், சபரி, ஆர்டிஎஸ் செந்தில், பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், ரஞ்சித் குமார், வசந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வரும் 31ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளன.



Leave a Reply