கோவை மாநகர், வடக்கு, தெற்கு காங்கிரஸ் தலைவர்கள் அறிவிப்பு – வேணுகோபால் அறிவிப்பு

Spread the love

கோவை மாவட்ட காங்கிரஸ் குழுவில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பின் படி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக சக்திவேல் பொறுப்பேற்க உள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வலுசேர்க்கை மற்றும் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.