விநாயகர் சதுர்த்தியை ஓட்டி அனைத்து வீடுகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி கோவை வடவள்ளி பகுதியில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…….
விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வீடுகள் மற்றும் வீதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் வீடு தோறும் விநாயகர்,வீதி தோரும் விநாயகர் என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மருதமலை சாலை வடவள்ளி பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அக்கட்சியினர் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வழங்கினர். விநாயகர் பிரதிஷ்டை செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தற்போது 501 விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு 5001 விநாயகர் சிலைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போது காவல்துறையினர் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ள சூழலில் அடுத்த ஆண்டாவது இந்த கெடுபிடிகளை தளர்த்த காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என விநாயகப் பெருமானை வேண்டிக் கொள்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்…….



Leave a Reply