ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது சிறப்பை தரும். விநாயகரை வீட்டில் வைத்து வழிபடும்போது, எத்தனை நாட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற சிறப்பு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படுபவர் விநாயகர். அவர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
விநாயகர் சதுர்த்தியன்று முழுமுதற் கடவுளான விநாயகருக்கு விருப்பமான லட்டு, கொழுக்கட்டை, சுண்டல், அவல், அருகம்புல் போன்றவற்றை வைத்து வழிபடுவது வாழ்வில் துன்பங்களை அகற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பலரும் ஆகஸ்டு 26-ஆம் தேதியே விநாயகர் சிலையை வாங்கி வழிபாடு செய்வார்கள்.
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு எத்தனை நாட்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும்? என குழப்பமான எண்ணங்கள் இருக்கின்றன. விநாயகர் சிலையை குறைந்தது ஒன்றரை நாள் முதல் அதிகபட்சமாக 11 நாட்கள் வரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். விநாயகர் சிலையை நாம் வீட்டில் வைக்கும் நாட்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் பலன்களும் மாறும். அதன்படி குறைந்தபட்சம் ஒன்றரை நாட்கள் வீட்டில் விநாயகரை வைத்து வழிபடுவோர் சதுர்த்தி நாளில் விநாயகரை வீட்டிற்கு கொண்டு வந்து பின் பஞ்சமி அன்று சிலையை கரைக்க எடுத்துக் கொடுப்பார்கள்.
மூன்று நாட்கள் வைத்து வழிபாடு செய்து நைவேத்தியங்கள் படைப்பது, பிரார்த்தனை செய்வது, 10 நாட்கள் வைத்து வழிபடுவது போன்றவை மங்களத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வைத்து வழிபாடு செய்வது நேர்மறை ஆற்றலையும், செல்வ செழிப்பையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஏழு நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் ஆனந்தம் குவியும் என்றும் சொல்லப்படுகிறது. விநாயகர் சிலை வழிபாடு பொறுத்தவரையில் அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வழிபட்டுக் கொள்ளலாம்.



Leave a Reply