கோவையில் சில்டரன் சாரிடபுள் ட்ரஸ்டு சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடைபெற்றது. கோவையில் உள்ள பல்வேறு இல்லங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்று விளையாடினர். கோகோ, கபடி, வாலிபால், தடகளம், செஸ், கேரம், கிரிக்கெட் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கோப்பைகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். இல்லங்களில் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு போன்றவை எட்டாக் கனியாக இருக்கின்றன. எனவே, ஆதரவற்ற குழந்தைகளுக்கு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றின் மேம்பாட்டுக்காக இந்த போட்டிகளை நடத்தியதாகவும், அதன் மூலம் குழந்தைகளின் மன உறுதியை ஏற்படுத்த உதவும் எனவும் சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் பாலா தெரிவித்தார்.
கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கிடையிலான போட்டிகள் – வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்து கெளரவிப்பு



Leave a Reply