குழந்தை பெற்றுகொள்ள பெண்கள் தேவையில்லை… சீனர்களின் அடுத்த சேட்டை

Spread the love

குழந்தை பெற்றுக்கொள்ளும் ரோபோவை சீன நிறுவனம் வடிவமைத்துள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டில் இருந்து சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவிகிதம் வெகுவாக குறைய தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்ளுவது 18 சதவீதமாக குறைந்து விட்டது. சீனாவில் அதிகரித்து வரும் கருவுறாமை விகிதத்தை நிவர்த்தி செய்யும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் ரோபோவை குவாங்சுவை சேர்ந்த கைவா டெக்னாலஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக கைவா டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜாங் கிஃபெங் கூறுகையில, ‘ இந்த திட்டம் ஏற்கனவே முற்று பெறும் நிலையில் உள்ளது. கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை ரோபோவிலுள்ள செயற்கை கருப்பை வழியாக நடைபெறும். இந்த ரோபோவுடன் மனிதர்கள் உறவு கொள்வதன் மூலம் அதனை கருத்தரிக்க செய்ய முடியும்.இதனால் கரு உள்ளே வளர முடியும். கர்ப்ப காலத்தில், வளரும் குழந்தை ரோபோவின் உடலுக்குள் செயற்கை அம்னோடிக் திரவத்தில் இருக்கும். இது கருப்பை போன்ற சூழலை உருவாக்கும். குறை பிரசவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டிகளை ஒரு செயற்கை கருப்பையில் வாரக்கணக்கில் உயிருடன் வைத்திருந்து ,முழு வளர்ச்சியுடன் வெளியே எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு இந்த ரோபோ சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் இந்த ரோபோவின் விலை 11.75 லட்சம் ஆகும். ரோபோ வழியாக குழந்தை பெற்றுக் கொள்ள பல நாடுகளில் தடையுள்ளது. இந்தியாவிலும் தடை இருக்கிறது. இது குறித்த கேள்விக்கு டாக்டர். ஜாங் பதிலளிக்கையில், முதல்கட்டமாக குவாங்சு மாகாணத்தில் ரோபோ வழியாக குழந்தை பெற்றுக் கொள்வதை அனுமதிக்க சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்’ என்றார்.

அதே வேளையில், சில சீன மருத்துவ நிபுணர்கள் , மனித கர்ப்பம் என்பது தாய்வழி ஹார்மோன் சுரப்பு போன்ற சிக்கலான உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியது . அதை தொழில்நுட்பத்தால் ஈடு செய்து விட முடியாது. அதோடு, பெண்களின் முக்கியத்துவத்தை மேலும் குறைத்து விடும்’ என்கின்றனர்.

அதே வேளையில், கர்ப்பம் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் நல பாதிப்புகளின் இருந்து பெண்கள் விடுதலை பெறுகின்றனர் என்றும் சிலர் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.