கோவை மாநகர் திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் ஏஸ் டெக் – ஏஸ் ரிஃப்லக்ட் கண்காட்சி துவக்கம்!

Spread the love

கோவை, ஆகஸ்ட் 23:
கோவை அவினாசி சாலையில் உள்ள கொடீசியா A ஹாலில் ACE TECH – ACE REFLECT (Architecture & Interior Design) கண்காட்சி சிறப்பாக துவங்கியது.

இக்கண்காட்சியை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஏஸ் டெக் – ஏஸ் ரிஃப்லக்ட் பிராண்ட் நிறுவனர் டைரக்டர் ஸ்ரீ விராஜ் ஃபிஷோல்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலாளர் தில்ஷாத் புஹாரி, தலைமை RSVP செல்வி. தன்வி சாவந்த், ஆர்யா விஜய்கர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

மேலும், கோவை மாநகராட்சி மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன், பீளமேடு திமுக பொறுப்பாளர் ஏ.எஸ். நடராஜ், கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி. லட்சுமணன், உறுப்பினர் வி.ஆர். வெங்கடேஷ், பல்வேறு கட்டிடக் கலை மற்றும் உள் அலங்கார வல்லுனர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கட்டிடக்கலை மற்றும் உள் அலங்கார துறையில் புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய வடிவமைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது.