இராமநாதபுரம் சிக்னல் முதல் அல்வேர்னியா பள்ளி வரை சாலையோரத்தில் கடைகள் அமைத்து வணிகர்கள் பொதுச்சாலையை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், அவற்றை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் INTUC கோவை மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் பாசமலர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.



Leave a Reply