உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ஒரு தொழில்முனைவோராக மாறுவது எப்படி” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கிற்கு நடைபெற்றது.

400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல கல்லூரிகள், பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்தனர். “தொழில்முனைவோர் என்றால் என்ன? ” என்று துவங்கி, மாணவர்களிடம் ஆழமான மற்றும் எளிமையான கேள்விகளை முன்வைத்து தலைமை விருந்தினரான பேராசிரியர் திருகோஸ்தியூர் கே. மணிகண்டன் இந்த நாளுக்கான முதல் அமர்வை துவங்கி நிறைவாக வழி நடத்தினார்.
ஒரு தொழிலை எப்படி துவங்குவது, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் எப்படி திட்டமிடுவது, இதற்கு முதலீடுகளை எப்படி பெறுவது, அரசாங்கத்தின் உதவும் திட்டங்கள் என்ன, போன்ற பல விஷயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. பங்கு பெற்ற மாணவர்கள் தங்களது திட்ட அறிக்கை மற்றும் யோசனைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தியது அனைவரையும் கவர்ந்தது

இந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்திய பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர். அனுஷா ரவி தனது உரையில், மாணவர்களின் திட்ட அறிக்கை மற்றும் யோசனைகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இந்த இளம் தலைமுறையினருக்கு இன்று நடைபெறும் பயிலரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்து அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார்.



Leave a Reply