பெண்களை ஏளனமாக பேசிய திமுக அமைச்சர் – மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Spread the love

விருதுநகர் அருகே மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், “மூக்கு, காதில் நகை போட்டிருந்தால் ரூ.1000 கிடையாது” என்று கூறிய திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஒரு அமைச்சராக நாகரிகமற்ற வகையில் பெண்களை கேலி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், அந்த அமைச்சர் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெண்களை “ஓசி”, “மெண்டல்கள்” போன்ற வார்த்தைகளால் தாழ்த்திப் பேசிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, திமுகவினர் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு, இனி இதுபோன்ற விமர்சனங்களைத் தவிர்க்க திமுக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.