கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டக்கூடாது – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Spread the love

தமிழக அரசு கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் திட்டத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு, கோயில் நிதியின் பயனை மத நிகழ்வுகளுக்கே மட்டுப்படுத்தும் வகையில் முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது.

2024ஆம் ஆண்டு அறநிலையத் துறை மானிய கோரிக்கையில், 27 கோயில்களில் ரூ.85 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பழனி தண்டாயுதபாணி கோயிலின் நிதியில் ரூ.6 கோடியில் மண்டபம் கட்டும் திட்டம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கெதிராக, பல தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவு:
கோயில் நிதி, கோயில் மேம்பாடு, மத நிகழ்வுகள், பக்தர்களின் நலன் ஆகியவற்றுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். திருமண மண்டபம், வணிக வளாகங்கள் போன்றவை மதச்சார்பற்ற நோக்கத்துடன் கட்டுவது சட்ட விரோதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், வணிக நிறுவனங்கள் போன்றவற்றையும் கோயில் நிதியில் கட்டும் அரசாணை தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கான விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.