அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை கோலாகலமாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு விண்ணதிர ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்துக்களின் கனவு நிகழ்வான அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேக சடங்குகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த தீட்சித் தலைமையில் 121 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.
இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் பிரதமர் தேவகெளடா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Reply