பாட்டாளி மக்கள் கட்சியில் தொடர்ந்து திருக்கின்ற உள்கட்சிப் பூசலுக்கு இடையே, முக்கியமான ஒரு கூட்டம் நாளை (17.08.2025) நடைபெற உள்ளது. கட்சி நிறுவனர் ராமதாஸ், அதனைத் திட்டமிட்டபடி நடத்துவதாக உறுதியாக அறிவித்துள்ளார்.
அன்புமணி – ராமதாஸ் தரப்புகளாக பிளவுபட்டுள்ள பாமகவில், சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் ஒருதரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தி, தலைமை பதவியை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்திருந்தார்.
இதற்குப் பதிலாக, ராமதாஸ் தனது தலைமையில் “சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம்” நாளை ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகே சங்கமித்ரா அரங்கில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அதனை இரத்து செய்யப்படுவதாக வதந்திகள் பரவுவதாகக் கூறிய ராமதாஸ், “இந்த கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேறலாம் எனவும், கட்சி நகர்வுகள் தீவிரமாகும் சூழ்நிலையில் இது முக்கியமான திருப்புமுனையாகக் காணப்படுகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்புகள் மீண்டும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டத்தின் அரசியல் தாக்கம் கவனிக்கத்தக்கதாக இருக்கலாம்.



Leave a Reply