நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல. கணேசன் (வயது 80) நேற்று (ஆகஸ்ட் 15) மாலை 6.23 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர் சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவராகவும், பின்னாளில் பாஜகவில் சேர்ந்தவர். 1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அதன் பின்னர் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியவர். 2021ல் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர், மேற்குவங்கத்தையும், பின்னர் நாகாலாந்தை ஆளுநராகப் பொறுப்பு வகித்தார்.
திருமணம் செய்யாமல் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த அவர், அண்மையில் சென்னைக்கு வருகை தந்து தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஏற்பட்ட வீட்டு விபத்தில் (கால் தவறி விழுந்து) தலையில் காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல், சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்காவிற்கு எதிரிலுள்ள மாநகராட்சி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை, அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முக்கிய தலைவராக இருந்த இல. கணேசனின் மறைவு, மாநில அரசியலில் ஒரு பெரிய இழப்பாகும்



Leave a Reply