2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 (திங்கள்) அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகளுக்காக தெற்கு இரயில்வே ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பாகவே வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் தொடர் விடுமுறைகளாக அமைந்துள்ளதால், பயணிகள் பெரும்பாலும் அக்டோபர் 17, 18 தேதிகளில் ஊருக்குச் செல்லவுள்ளனர். இதனை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 16) முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
அக்டோபர் 13 முதல் 26 வரை சொந்த ஊருக்குச் செல்வதற்கான முன்பதிவு, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை திரும்பி வருவதற்கான முன்பதிவுகளை செய்து கொண்டால், பயண கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த தள்ளுபடியான டிக்கெட்டுகள் மீண்டும் பணம் திரும்பப்பெற முடியாதவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை நெருக்கடியில் இருந்து காக்கும் வகையில், ரயில் புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அனைத்து தினங்களிலும் முன்பதிவு காலை 8 மணிக்கு துவங்கும். பயணிகள், குறிப்பிட்ட தேதிகளுக்கான ரயில்வே கால அட்டவணையை பார்த்து, உடனே முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெளி மாநிலங்களுக்கான (வட இந்தியா) முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.



Leave a Reply