, ,

அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டுகால இந்துக்களின் எழுச்சி போராட்டத்திற்குப் தீர்வு – இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி

kadeswara subramaniam
Spread the love

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும்.குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.அனைத்து முக்கிய இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை காண மக்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.இப்படி நாடே இந்த புனிதநிகழ்வினை வரவேற்றிட ஆர்வமாக உள்ள நிலையில் ஒரு சிலர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதைப் பற்றி எதிர்மறை கருத்துக்களை திணித்து வருகின்றனர். இது அவர்களின் வயிற்று எரிச்சலை வெளிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த இந்துக்களும் இந்த விழாவை கொண்டாட முடிவு செய்து விட்டனர். இதை வைத்து மத அரசியல் செய்பவர்களின் பேச்சு இனி ஈடுபடாது.நாளை அனைத்து கோவில்களிலும் ராமர் சிறப்பு பூஜை நடைபெற இருந்த நிலையில் தமிழக அரசு  வாய்மொழி உத்தரவின் மூலமாக கோவில்களில் ராம பஜனைக்கோ அன்னதானம் செய்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.தமிழக அரசு இந்த விழாவை சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக புறக்கணித்து வருவதற்கு பெரும்பான்மை இந்து சமுதாயம் வருகின்ற தேர்தலில் பதிலடி தருவார்கள்.காந்தியடிகள் கண்ட கனவு ராமர் ஆலயம் என்பதையும் இவர்கள் உணர வேண்டும். 500 ஆண்டுகால இந்துக்களின் எழுச்சி போராட்டத்திற்குப் பிறகு இந்த தீர்வு கிடைத்துள்ளது.என்றார்.