கோவையில் மெட்ரோ, எய்ம்ஸ் திட்டங்களை வலியுறுத்தி கொங்கு நாடு கட்சியின் ஆர்ப்பாட்டம் – டிரோன் கேமரா பறிமுதல்

Spread the love

மத்திய அரசின் போக்கை கண்டித்து, மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

முக்கிய கோரிக்கைகள்:

  • கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்

  • மெட்ரோ திட்டத்தை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்

  • கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைவை உடனடியாக நிறுவ வேண்டும்

நித்தியானந்தன் பேசிய போது, “இந்த பகுதியில் கேன்சர் போன்ற மோசமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. அந்த நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அவசியமாக உள்ளது. மெட்ரோ திட்டத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்றார்.

டிரோன் பறக்க விட்டதால் பரபரப்பு:
ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியினர் அனுமதியின்றி டிரோன் கேமராவை பறக்க விட்டதையடுத்து, காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.